நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருப்பவர் தான் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.
இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்கு எப்போது பெயர் பெற்றவராக ஜொலித்து வருகிறார். தொடர்ந்து தனது படங்களை தமிழ்சினிமா வேகமாக சென்று கொண்டு இருக்கும் திசையில் செல்லாமல், இப்படியும் ஒரு வகையான சினிமா உள்ளது என தொடர்ந்து ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார், இவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தான் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பார்த்திபன் கடந்த 1989 ஆம் ஆண்டு தனது முதல் படமான புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா. இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும், 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். இவர்களுக்கு கீர்த்தனா, ராக்கி மற்றும் அபிநயா என மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின்னர் பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. அதேபோல் சீதாவும் மறுமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில், பார்த்திபன் சீதாவுடனான மணமுறிவுக்குப் பின்னர் அவர் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தைத் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது, இது தொடர்பாக அவர் பேசும்போது, " சீதாவுக்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரைப் பிரிந்த பின் அவரது தாயார் இறப்பின் போதே அவரை கடைசியாக சந்தித்தேன். இந்த் வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக நினைவுகளுடன் பயணிக்கத் தொடங்கி விட்டேன். இதுவும் ஒருவிதமான காதலின் வடிவம்" எனத் தெரிவித்துள்ளார். பார்த்திபன் இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.