இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் சூரியின் காதலியாக நகைச்சுவை காட்சியில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் ஷாலு ஷம்முவின் முகம் அனைவருக்கும் பரீச்சியமானது. அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒல்லியாக கருப்பான இருந்த ஷாலு ஷம்மு, திடீரென உடல் எடை கூட கவர்ச்சி நடிகை போல சும்மா கும்னு மாறிவிட்டார். உடல் எடை கூடிய பிறகு, சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோ போடுவது, போட்டோஷூட் நடத்துவது என படு பிஸியாகவே இருக்கிறார். ஓரிரு திரைப்படத்தில் அதுவும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து தலைக்காட்டி சென்ற ஷாலு ஷம்முவுக்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர் இருப்பதால், படவாய்ப்பு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன எனக்கு இருக்கவே இருக்கு போட்டோஷூட் என சோஷியல் வீடியாவில் புகுந்து விளையாடி வருகிறார் ஷாலு ஷம்மு
நடிகை ஷாலு ஷம்முவை இன்ஸ்டாகிராம் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் சிவப்பு நிற உடையில் ஸ்டையாக இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு மேட்சான செருப்பையும் சிவப்பு நிறத்திலேயே போட்டுள்ளார்.அதே போல, ஸ்டையான உடைக்கு ஏற்ற படி கழுத்தில் கோல்ட் செயினும், சுட்டை முடியும் சும்மா அம்சமா உள்ளது. இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வரும் நிலையில், கழுத்தில் இருப்பது தான் ஹைலைட் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.