வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. 2017ல் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில காரணங்களால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதன்பின் அவர் எங்கே என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு படுஒல்லியாக மாறிய ஸ்ரீயின் வீடியோ இணையத்தில் வைரலாகி டிரெண்ட்டானது.
கடைசியாக நடிகர் ஸ்ரீ, 2023ல் வெளியான இறுகப்பற்று படத்திற்கு பின் படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஏற்பட்ட விரக்தி தான் இப்படி அவர் மாற காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் ஸ்ரீ சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஆண்கள், பெண்கள் ஆபாசமாக பேசவேண்டும் என்றால் என்னை அணுகுங்கள் என்றும் நட்பு பாராட்டலாம் என்றும் ஸ்ரீ பேசி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த செயலால் பலரும் அதிர்ச்சியில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.