சென்னை: வழக்கு எண் 18/9, மாநகரம் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ தற்போது உடல் எடை மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி இருக்கிறார். இணையத்தில் வெளியான இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் அவருக்கு என்ன ஆச்சு என கவலையோடு கேட்டு வருகின்றனர். 2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ஸ்ரீ.
பள்ளிக்கூட சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த, கனா காணும் காலங்கள் இளைஞர்களை கவரும் வகையில் இருந்தது. இதன் மூலம் பிரபலமான ஸ்ரீ, பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி வழக்கு எண் 18/9 படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு விஜய் டிவி சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை கொடுத்தது. "Maanagaram Shri: என்னை சுற்றி நடந்த பிரச்சனை.. சினிமாவே வேண்டாம்.. ஸ்ரீயின் பழைய பேட்டி!" நடிகர் ஸ்ரீ: அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம் என வருடத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்தார்.
2017ம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படமாகும். அந்த படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஸ்ரீக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்ற இந்த படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டு மும்பைக்கார் என்ற பெயரில் வெளியானது. மாநகரம் என்ற வெற்றி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவர் படத்திலும் கமிட் ஆகவில்லை. இது தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், போட்டி தொடங்கிய நான்கு நாட்களிலேயே, எனக்கு இதெல்லாம் செட்டாகி என்று தனிப்பட்ட காரணத்தை சொல்லி ஸ்ரீ அந்த போட்டியிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஸ்ரீ கடைசியாக இறுகப்பற்று படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் நன்றகாக பேசப்பட்டது. அதன் பிறகு ஸ்ரீ என்ன ஆனார்... எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்தது. " ஸ்ரீ எங்கே இருக்கானே தெரியல.. ஃபோனை எடுக்கல.. அவன் ரொம்ப பாவம்..தோழி கதறல்!" ரசிகர்கள் அதிர்ச்சி: இந்நிலையில் நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலும்பும் தோலுமாக இருக்கும் போட்டோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அதிர்ச்சி அடைந்து. ஸ்ரீக்கு என்ன ஆச்சு என்றும், அடையாளமே தெரியவில்லையே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ந்து, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என சமைத்து சாப்பிடுவதை பதிவிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்க்கும் போது, ஒரு சிறிய அறையில் தான் நடிகர் ஸ்ரீ இருக்கிறார் என்று தெரிகிறது. மேலும், அவர் தலைமுறையை கலரிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப்பார்க்கும் போது அவருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால் இணையத்தில் பலர் என்ன ப்ரோ இப்படி ஆகிட்டீங்க, என்ன ஆச்சு மருத்துவரை பாருங்கள் என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அழகான, திறமையான நடிகர் ஸ்ரீக்கு இப்படி ஒரு நிலைமையா என பலர் கேட்டு வருகின்றனர்.
மாநகரம் ஸ்ரீக்கும் குடும்பத்துக்கும் தொடர்பில்லை.. நிறைய ஏமாத்திட்டாங்க.. உறவினர் கொடுத்த விளக்கம் ஸ்ரீ எவ்வளவு நல்லவர் தெரியுமா?.. அவர் என்ன பண்றாருனு யாருக்கும் தெரியாது.. பிரபல நடிகை ஓபன் டாக் மாநகரம் ஸ்ரீக்கு வந்த நிலைமை.. மனசு உடைந்துப்போன ரசிகர்கள்.. ஆபாச மெசேஜ்களை பார்த்தாலே பதறுதே! பாவாடையை இழுத்து படு கேவலமாக ஆடுன ஆட்டத்துக்கு சென்சார்.. வெளியானது அதீத சர்ப்ரைஸ் வீடியோ பாடல்! பிரசாந்த் மாதிரி ஒரு அழகனை பார்த்தது இல்லை.. கறுப்பா இருந்தால் ரிஜெக்ட்.. ரோஜா சொன்ன சீக்ரெட்