ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி வெற்றிகரமாக ஓடும் ரியாலிட்டி ஷோக்கள் என்றால் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் தான். சரிகமப லில் சாம்ஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, டான்ஸ் ஜோடி டான்ஸ் பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வந்ததை பார்த்திருப்போம். தற்போது ஜீ தமிழில் இரண்டு ரியாலிட்டி ஷோக்களின் மகா சங்கமம் நடந்துள்ளது.
அதில் ஒரு சரிகமப போட்டியாளர் மனம் நெகிழும் வகையில் ஒரு சந்தோஷ விஷயம் செய்துள்ளார் நடிகை சினேகா. இதுநாள் தனது காது குத்தவில்லை என சரிகமப போட்டியாளர் கூற ஒரு அக்கா இடத்தில் இருந்து சிறப்பாக செய்துள்ளார் சினேகா. இதோ வீடியோ,